Friday, May 10, 2019

சிறுசேமிப்பு -பயங்கள்,எளிய சேமிப்புக்கான வழிகள்

                            சிறுசேமிப்பு 


முன்னுரை :
                    "பொருள் இல்லாருக்கு இவ்வுலகமில்லை" என்றார் வள்ளுவர். "பணம் பத்தும் செய்யும்" என்பது பழமொழி.வாழ்க்கை என்னும் வண்டி இனிதே செல்ல பொருள் என்னும் சக்கரம் தேவையாகும்.அவ்வாறு நல்வழியில் தேடிய பொருளின் ஒரு பகுதியைச் சேர்த்து வைப்பதே நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பொருளுரை:
                        மழைக்காலத்திற்குத் தேவையான உணவை எறும்புகள் முன்னரே சேமித்து வைத்துக் கொள்கின்றன. அது போல மனிதன் தனது எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். மனிதனுக்கு அவசரத் தேவை என்று எப்போது வேண்டுமானால் வரலாம். அப்படி ஒரு அவசர நிலை வரும் பொழுது செய்வதறியாது திகைக்காமல் முன்பே சேமித்து வைத்திருந்தால் அது கை கொடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. சேமிப்பதால் நமது எதிர்காலம் வளம் பெறும்.

எளிய சேமிப்புக்கான சிறு வழிகள்:

சேமிப்பு

நேர்மறை(ப்ளஸ் )

எதிர்மறை (மைனஸ்)             
சஞ்சாயிகா
பள்ளி மாணவர்களுக்கான   சிறுவர் வங்கி

சிறுவாட்டுச் சேமிப்பு (அம்மாக்கள் ரகசியமாக சேமிக்கும் சேமிப்பு )
நினைத்த நேரத்தில்இந்தச் சேமிப்புப்    பணத்தைப்      பயன்படுத்தலாம்சேமிப்புப் பணத்துக்கு நிச்சய                 உத்தரவாதம் உண்டு.
 பண வீக்கத்தைத்தாண்டிய  லாபம் கிடைக்காது.
தபால் நிலைய சேமிப்பு/வங்கிகள் 
பாதுகாப்பு
 வட்டிவிகிதம் குறைவு 
மியூச்சுவல் ஃபண்டு
வட்டிவிகிதம் அதிகம்
 அபாயம் உண்டு. நீங்கள் தேர்தெடுக்கும் நிறுவன-த்தின் ஏற்ற இறக்கத்தை              முன்னிட்டு மாறுபடும்.

சேமிப்பின் பயங்கள் :
  • உயர் படிப்பிற்க்காக 
  • எதிர்பாராத குடும்ப செலவிற்காக 
  • வாழ்க்கை முன்னேற்றத்திற்காக 
  • முதுமை காலத்தில் இன்பத்துடன் கழிக்க
போன்ற நம் தேவைகளுக்கு சேமிப்பு உதவுகின்றது.நாம் உழைத்து வாழ வேண்டும் . பிறர் உழைப்பில் வாழ்தல் ஆகாது . சிக்கனத்துடனும் சேமிப்புடனும் வாழ வேண்டும் . நமது எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும் .

முடிவுரை:
              "சிறுதுளி பெருவெள்ளம் " என்பது பழமொழி.ஆதலால் நாம் சேமிக்கும் பழக்கத்தை இளமை பருவத்திலேயே மேற்கொண்டு சேமித்து வளமுடையவராக வாழ்வோமாக !!!