எனக்குப் பிடித்த பண்டிகை
முன்னுரை:தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை தான் எனக்குப் பிடித்த பண்டிகை ஆகும்.தமிழரர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா "பொங்கல்" ஆகும்.
பொருளுரை:
தை மாதம் என்பது ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடைவதே ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த புது அரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் செய்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.மஞ்சள் தோரணங்கள் கட்டி, கரும்பு உண்டு பொங்கலைக் கொண்டாடுவார்கள்.
பொங்கல் கொண்டாடும் விதம்:
இந்தப் பண்டிகை நான்கு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. போகி :
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" போகிப் பண்டிகை ஆகும். மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் நமது பழைய ஆடைகளை குப்பையில் எறிந்துவிடும் விழா.
சூரியப் பொங்கல்: சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகும்.
மாட்டுப் பொங்கல்: விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள்
காணும் பொங்கல்: இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் வேண்டிக்கொள்வது இந்நாளில் தான். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
முடிவுரை :
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற கருத்துக்கு இணையாக தமிழர் பண்டிகையனப் பொங்கலைக் கொண்டாடி இயற்கைக்கும் ,மற்ற உயிர்களுக்கும் நாம் நம் நன்றியை செலுத்துவோம் .